மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் படுகாயம்
மிசிசாகாவில் இடம்பெற்ற கடும் வாகன விபத்தில், இரண்டு பேருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
மேவிஸ் சாலை மற்றும் எக்லின்டன் அவென்யூ வெஸ்ட் சந்திப்பில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில், 57 வயதுடைய ஆணும், 38 வயதுடைய பெணும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இருவரும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குப் பின்னர், பாதுகாப்பு நடவடிக்கையின்போது, ஹீதர்லீக் அவென்யூ அருகே கிழக்கு நோக்கி எக்லின்டன் அவென்யூ, மற்றும் ஹன்டிங்டன் ரிட்ஜ் டிரைவ் அருகே வடக்கு நோக்கி மேவிஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.