பல அமெரிக்கர்களின் முதலீட்டு பணத்தை மோசடி செய்த இருவர் நாடு கடத்தல்
அதிக வட்டி தருவதாக, 830 கோடி ரூபாய் மோசடி செய்த பிரிட்டன் நாட்டவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் வெல்லஸ்சி, 58. இவரின் நண்பர் ஸ்டீபன் பர்டன் 60. இருவரும் கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவின் நியூயார்கைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் ஒரு திட்டத்தை விவரித்தனர்.
அதில், 'எங்களிடம் விலை உயர்ந்த ஒயின்களை சேகரிக்கும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கடன் வழங்கினால் அதிக வட்டி கிடைக்கும்' என கூறினர்.
ஆனால் அப்படி எந்த ஒயின் சேகரிப்பாளர்களும் உண்மையில் இல்லை. இதை நம்பி, 830 கோடி ரூபாய் வரை அமெரிக்கர்கள் முதலீடு செய்தனர்.
பணத்துடன் இருவரும் தப்பினர். பிரிட்டனில் கைது செய்யப்பட்ட வெல்லஸ்சி சமீபத்தில் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.