அஜாக்ஸில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் பலி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள அஜாக்ஸ் நகரில் இடம்பெற்ற வீட்டுத் தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டர்ஹம் பிராந்திய காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இரவு 11 மணியளவில் டாவுன்டன் Taunton வீதி கிழக்கு மற்றும் சேரம் Salem வீதி வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் ஒரு ஆயுதம் கொண்ட நபர், தனது குடும்ப உறுப்பினர்களை மிரட்டியதாக ஒரு அழைப்பு கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புத் துறையினரும் அந்த வீட்டில் தீப்பற்றியதை கண்டனர்.
தீயணைப்புப் படையினர் பலரை வீடிலிருந்து வெளியே அழைத்து பாதுகாப்பாக அவசரமாக அண்டை வீடுகளையும் இடம்பெயர்த்தனர்.
தீ அணைக்கப்பட்ட பின்னர், அந்த வீட்டுக்குள் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை. தீ எப்படி ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது, யாரால் ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
சமப்வம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.