கனடாவில் கார் மற்றும் ரயில் மோதி கோர விபத்து... இருவருக்கு நேர்ந்த நிலை!
கனடாவில் கார் மற்றும் ரயில் மோதிக் கொண்டதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் மொன்றியால் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை வேளையில் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் மோதுண்ட வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றதாகவும், பின்னர் வாகனத்திற்கு அருகாமையில் வந்த போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமைடைந்துள்ளனர். எனினும் காயமடைந்த இருவருக்கும் உயிராபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்று பார்வையிடுவதனை மக்கள் தவிர்க்க வேண்டுமெனவும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.