முக கவசம் அணிய சொன்ன நபருக்கு நடந்த கொடூரம்! ராணுவ வீரர் அதிரடி கைது
ரஷ்யாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் அரசு பொது சேவை மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த மையத்திற்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வருகை தந்துள்ளார். அப்போது அவர் மாஸ்க் அணியாமல் வந்ததாக கூறப்படுகின்றது.
இதனால் அங்கே வேலை செய்யும் பாதுகாவலர் ஒருவர் அவரை மாஸ்க் அணியும் படி கூறினார். ஆனால் அவர் அதை மதிக்காததால் பாதுகாவலர் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார்.
இதனிடையே இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பயங்கர ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பாதுகாவலரை ஈவு இரக்கமில்லாமல் சரமாரியாக சுட்டு கொலை செய்துள்ளார்.
இதை தட்டி கேட்ட இன்னொரு பாதுகாவலரையும் சுட்டு கொலை செய்தார். 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை பொலிஸ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.