தந்தையர் தின துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது
நோர்த் யோர்க்கில் தந்தையர் தினமன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 19ம் திகதி லொதர்டன் மற்றும் கலிடோனியா ஆகிய வீதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 24 வயதான ஜாரோன் வில்லியம்ஸ் என்ற நபர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கம்பல் பிறவுன் மற்றும் ஜஸ்ரின் ஹார்கர் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த இருவரையும் பொலிஸார் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலை செய்தனர் எனவும், இருவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தந்தையர் தினமன்று றொரன்டோவில் சில இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.