சமூக வலைத்தள வேலைவாய்ப்பு மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சமூக வலைத்தள வேலை வாய்ப்புக்கள் தொடர்பான மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியை சேர்ந்த இருவர் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் கிடைத்த போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கி, மொத்தம் 80000 டொலர்களுக்கும் மேற்பட்ட பணத்தை இழந்துள்ள சம்பவங்கள் வெளியாகி உள்ளன.
டொரோன்டோவைச் சேர்ந்த கிரேக் பெர்கோஸ், அண்மையில் 11,000 டொலர்இழந்துள்ளார்.
பணியை இழந்தபின் மருத்துவ செலவுகளால் பாதிக்கப்பட்ட பெர்கோஸ், ஒரு சமூக ஊடக விளம்பரத்தில் "பகுதி நேர வேலைக்கு பணம் தருகிறோம்" என்ற விளம்பரத்தைக் கண்டு தொடர்புகொண்டார்.
அதன்படி அவர் ஒரு TikTok Shop கணக்கை தொடக்குமாறு கூறப்பட்டு, முதலீட்டு பொருட்களை முன்கூட்டியே கொள்வனவு செய்ய பணம் செலுத்த வேண்டும் என்றும், பின்னர் தரகு கிடைக்கும் என்றும் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பின்னர் அது முழு மோசடி என்பது தெரியவந்துள்ளதாகத் பெர்கோஸ் தெரிவிக்கின்றார்.
ஒஷாவாவைச் சேர்ந்த மரியா என்ற மற்றொரு பெண்ணும் 70,000 டொலர் பணத்தை இழந்துள்ளார்.
சுயவிவரங்களை பல நிறுவனங்களுக்கு அனுப்பியிருந்த மரியா, சமூக ஊடக வழியாக “தளத்தில் பொருட்கள் மதிப்பீடு செய்யும் வேலை” என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டதும் இணைந்தார்.
ஆனால், சமூக ஊடகங்களில் இருந்து வரும் சந்தேகமான வேலை வாய்ப்புகளை ஏற்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்புகள் மற்றும் எளிய பணிக்கே அதிக ஊதியம் அளிக்கப்படும் எனும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் எனவும், பணம் அனுப்பும்போது கவனமாக இருக்கவும், பணம் சம்பாதிக்கவே பணம் செலுத்துமாறு கூறினால் அது மோசடியாக இருக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.