கனடாவில் இரண்டு பேரை காவு கொண்ட தீ விபத்து
கலக்கரியில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கால்கரியின் கிளேன்ப்ரோ பகுதியில் இந்த தீ விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவத்திற்கான பின்னணி என்ன என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் சென்றுள்ளனர்.
இந்த வீட்டிலிருந்த இருவர் தீ விபத்தினை அவதானித்து வெளியே வந்து விட்டனர்.
எனினும் இரண்டு பேர் கடுமையான புகை மூட்டத்துக்குள் சிக்கி உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.