எட்டோபிக்கோவில் 16 வயது சிறுவன் கொலை: டொராண்டோவை சேர்ந்த இருவர் கைது
எட்டோபிக்கோவில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய வழக்கில், டொராண்டோவைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 கேப்ரி வீதி, ஈஸ்ட் மால் மற்றும் ரத்பர்ன் வீதி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு ஆண்களை மீட்டு, உடனடியாக அவசர முதலுதவிகளை வழங்கினர். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தில் பலியானவர் 16 வயது இசையா போகா என பொலிஸார் உறுதி செய்தனர்.
குறித்த சிறுவன் டொராண்டோவில் இந்த ஆண்டு நடந்த இரண்டாவது கொலை சம்பவத்தின் பலியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்திற்குப் பிறகு, முகமூடிகள் அணிந்த இரண்டு சந்தேக நபர்கள் கட்டடத்திலிருந்து வெளியேறி தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டொராண்டோ போலீசாரின் கொலை மற்றும் காணாமல் போனவர்கள் விசாரணைப் பிரிவு, தேடப்பட்ட இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்துள்ளது.
எலியட் சாவியர் யேரா (18 வயது) மற்றும் ஷமோன் பொம்பே-தாமஸ் (20 வயது) ஆகிய சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.