வயோதிப தாயை கொலை செய்த மகனுக்கு 8 ஆண்டுகள் சிறை
அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் 81 வயதான தாயை கொலை செய்த 57 வயது மகனுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ண் வடமேற்கு பகுதியில் 2023 ஆண்டு ஜுன் 12 ஆம் திகதியே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகன், தாயின் கழுத்தை நெறித்துள்ளார்.
இதனையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவான மக்கள் 2023, ஜுன் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கிலேயே எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஐந்து வருடங்கள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பிறகு பிணைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.