காஸாவுக்கான உதவிகளை தடுத்த இஸ்ரேல்
போரினால் சிதைவடைந்த காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இஸ்ரேலின் இந்த மனிதாபிமானத் தடையானது காஸாவில் உள்ளவர்களை ஆபத்தில் தள்ளும் செயற்பாடாகும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
அதேவேளை இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் , போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நிரந்தர போர் நிறுத்தமானது எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு பங்களிப்பதுடன், காஸாவில் மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்குமான வாய்ப்பாக அமையும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்தமையானது சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க்குற்றம் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.