மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 200 சீன மோசடி சந்தேக நபர்கள்
மியன்மாரில் இருந்து மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200 சீன பிரஜைகளின் முதல் குழுவை திருப்பி அனுப்பும் பட்டய விமானம் தாய்லாந்து வழியாக கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங்கில் வியாழக்கிழமை பிற்பகல் தரையிறங்கியது.
சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, தொலைத்தொடர்பு-இணைய மோசடிகளைத் தடுக்க சீனா, தாய்லாந்து மற்றும் மியன்மார் இடையேயான பன்னாட்டு சட்ட அமலாக்க முயற்சிகளில் இது ஒரு மைல்கல் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 800-க்கும் மேற்பட்ட சீன சந்தேக நபர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் வாடகை விமானங்களில் ஜியாங்சு மாகாணத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் தகவலை மேற்கொள்காட்டி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, மூன்று நாடுகளின் சட்ட அமலாக்க அதிகாரிகள் சமீபத்தில் மியாவாடியில் தொலைத்தொடர்பு மோசடிக்கு எதிராக கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.