2021 மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவு!
2021-ம் ஆண்டு, வெப்பநிலை பதிவுகளை பராமரிக்க தொடங்கியதில் இருந்து பூமியின் மிகவும் வெப்பமான 7 ஆண்டுகளில் ஒன்றாக இருந்துள்ளதாக பதிவாகியுள்ளது. உலக வானிலை நிறுவனம் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் சராசரி உலக வெப்பநிலை 1.11 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. தொடர்ந்து 7-வது ஆண்டாக உலக சராசரி வெப்பநிலை 1 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது.
அமெரிக்காவில் நடந்த 2 ஆய்வுகளும் கடந்த ஆண்டு வெப்பமான ஆண்டாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. கடந்த ஆண்டு ‘எல் நினா’ எனப்படும் சீதோஷ்ணநிலை மாற்றம் ஏற்பட்டது.
இந்த சீதோஷ்ணநிலை , பருவநிலையை குளிர்ச்சியாகவும், மழை நிறைந்ததாகவும் மாற்றும். இருப்பினும், போதிய அளவுக்கு வெப்பநிலையை குறைக்காததால், கடந்த ஆண்டு வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது.
இந்நிலையில் நடப்பு 2022-ம் ஆண்டில் ‘எல் நினா’வின் தாக்கம் நீடித்தாலும், இதுவும் வெப்பமான ஆண்டாகவே இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் அடுத்தடுத்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2021 மிகவும் குளிர்ச்சியான ஆண்டாக மாறிவிடும் என்றும் உலக வானிலை நிறுவனம் கணித்துள்ளது.