கனடாவில் வரலாறு காணாத நிலை
கனடாவில் வரலாறு காணாத அளவிற்கு காட்டுத் தீ பரவுகை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் அவசர ஆயத்தநிலை அமைச்சர் பில் பிலயர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வழமையாக கோடை காலங்களில் பதிவாகும் காட்டுத் தீ சம்பவங்களை விடவும் இந்த ஆண்டில் கூடுதல் காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலைமை எதிர்வரும் மாதங்களிலும் நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காட்டுத் தீ சம்பவங்களினால் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில பகுதிகளில் இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் மதியம் வரையில் கனடாவில் 424 காட்டுத் தீ சம்பவங்கள் கனடா முழுவதிலும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் 250 காட்டுத் தீ சம்பவங்கள் கட்டுக்கு அடங்காதவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.