2025 ஆம் ஆண்டு வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவு
2025 ஆம் ஆண்டு உலகின் இரண்டாவது அல்லது மூன்றாவது வெப்பமான ஆண்டாக இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் (Copernicus) காலநிலை மாற்ற சேவை (C3S) தெரிவித்துள்ளது.
C3Sஇன் தரவுப்படி, சராசரி உலக வெப்பநிலை தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மிகவும் கொடிய காலநிலை பேரழிவு
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் கொடிய காலநிலை பேரழிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீ உட்பட, உலகளவில் மிக உயர்ந்த கடல் வெப்பநிலை தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு பங்களித்துள்ளதாக மேற்படி ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை கடந்த 10 ஆண்டுகள் பதிவில் 2023, 2024 மற்றும் 2025 ஆகியவை மிகவும் வெப்பமான ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.