மொண்ட்ரியலில் இந்த வகை வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை
கனடாவின் மொணட்ரியல் நகரில் வெஸ்ட் நைல் (West Nile) வைரஸ் தொற்றுகள் அதிகரித்து, சுமார் பத்து நோயாளிகளில் நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை வரையிலான தகவலின்படி, இந்த ஆண்டில் மொண்ட்ரியலில் 25 தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் 23 சம்பவங்கள் செப்டம்பர் மாதத்திலேயே பதிவாகியுள்ளன. இது 2010–2019 காலப்பகுதியில் செப்டம்பர் மாதத்திற்கான சராசரி (8.8) விட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
2018இல் பதிவான 33 சம்பவங்களே இதுவரை அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மொண்ட்ரியல் தீவிலேயே தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
உறுதிப்படுத்தப்பட்ட 25 பேரில் 21 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களில் குறைந்தது பத்து பேருக்கு நரம்பியல் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பருவ காலத்தில் கீயுபகெ் மாகாணத்தின் முதல் மேற்கு நைல் தொற்று ஆகஸ்ட் 21ஆம் திகதி மொண்ட்ரியல் பகுதி ஒருவரிடம் உறுதிசெய்யப்பட்டது.
இவ்வைரஸ், பெரும்பாலும் நுளம்புக் கடி மூலமாக பரவுகிறது எனவும் தொற்றுக்குப் பிறகு 2 முதல் 15 நாட்கள் வரை அறிகுறிகள் தோன்றக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.