டிக் டாக் தடை நீக்கமா? ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ட்ரம்ப்
டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
டிக்டாக் செயலியின் சேவை
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை தற்போது வரை ஜனாதபதி ட்ரம்ப் தொடர்ந்து நீட்டிப்பு செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் டிக் டாக் செயலி மீண்டும் செயல்படும் ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். டிக் டாக் செயலியின் பெரும்பாலான கட்டுப்பாட்டை அமெரிக்கா கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.