கனடாவில் பிஸ்தாவில் நோய்க்கிருமிகள்: சுகாதார அமைப்பு அறிவிப்பு
கனடாவில் பிஸ்தா மற்றும் பிஸ்தா சேர்த்த இனிப்பு வகைகளை உட்கொண்ட 105 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது.
பிஸ்தா, பிஸ்தா சேர்க்கப்பட்ட பக்லாவா என்னும் இனிப்பு, ஐஸ்கிரீம் மற்றும் சொக்லேட்களில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகளின் தாக்கம் இருந்ததாலேயே அவற்றை உட்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருந்துள்ளது.
சில பிராண்ட் பிஸ்தா மற்றும் பிஸ்தா சேர்த்த இனிப்பு வகைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ள கனடா உணவு ஆய்வு ஏஜன்சி, அது குறித்த விவரங்கள் தங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பிஸ்தா உணவுகளை வாங்கியோர் அவற்றை குப்பையில் வீசிவிடவோ அல்லது வாங்கிய கடைகளிலேயே திருப்பிக் கொடுத்துவிடவோ செய்யுமாறு கனடா உணவு ஆய்வு ஏஜன்சி அறிவுறுத்தியுள்ளது.