ஒரே வருடத்தில் 20 குழந்தைக்கு அம்மாவான 23 வயது பெண்!
57 வயது கோடீஸ்வர தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ள, 23 வயது யுவதி, ஒரு வருடத்தில் 20 குழந்தைகளிற்கு தாயாகியுள்ளார்.
கிறிஸ்டினா ஒஸ்டார்க் (23), தனது மில்லியனர் கணவர் கலிப் ஒஸ்டார்க்கை (57), ஜோர்ஜியாவுக்கு ஒரு பயணம் சென்றபோது சந்தித்தார். தனது சொந்த நாடான துருக்கியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஜோர்ஜியாவிற்கு வந்திருந்தார் கலிப் ஒஸ்டார்க்.
ஒரு வருடம் முன்பு அவர்கள் ஒரு குழந்தையைப் பெற்றனர். ஆனால் வாடகைக்கு 138,000 டொலர் செலுத்திய பிறகு, அவர்களது குடும்பம் அதிவேகமாக விரிவடைந்துள்ளது, இப்போது அவர்களுக்கு 21 குழந்தைகள் உள்ளனர்.
பணக்கார தம்பதியினர் 16 பணிப்பெண்களை கொண்டுள்ளனர். அவர்களின் சம்பளமாக ஒவ்வொரு ஆண்டும் 67,700 டொலர் செலவிடுகிறார்கள்.
கிறிஸ்டினா, ரஷ்யாவை பின்னணியாக கொண்டவர். ஏற்கனவே ஒரு முறை திருமணம் செய்து கொண்ட கலிப்பை சந்தித்தபோது, அவர்கள் ஒரு பெரிய குடும்பத்தின் கனவைப் பகிர்ந்து கொண்டனர்.
இப்போது, அந்த இளம் பெண் தன் குழந்தைகளுடன் எப்போதும் இருப்பதாகவும், “அம்மாக்கள் பொதுவாக செய்யும் எல்லா செயல்களையும்” செய்கிறார் என்றும் கூறுகிறார்.
கலீப் மற்றும் கிறிஸ்டினா – கடந்த ஆண்டு மார்ச் மாதம் முஸ்தபா என்ற சிறுவனை வாடகை தாய்பெற்றெடுத்தனர்.
பின்னர் அவர்கள் ஒவ்வொரு கர்ப்பத்திற்கு 7,700 டொலர் வாடகைக்கு செலுத்தினர். இப்போது நான்கு மாதங்கள் முதல் 14 மாதங்கள் வரையான 20 குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.
3 மாடி வீட்டில் வசிக்கும் இந்த கோடீஸ்வர குடும்பம் ஒவ்வொரு வாரமும் குழந்தைகளின் தேவைக்காக 53 பொதி நப்கின்களை கொள்வனவு செய்கிறார்கள்.
சுற்றுலா, போக்குவரத்து மற்றும் நிதி ஆகிய துறைகளில் முதலிட்டுள்ள தொழிலதிபர் கலிப், துருக்கியைச் சேர்ந்தவர், ஆனால் 2013 முதல் ஜோர்ஜியாவில் வசித்து வருகிறார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
அவர் துருக்கிய நிறுவனமான மெட்ரோ ஹோல்டிங்கின் நிறுவனர் மற்றும் ஜோர்ஜியாவில் 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள முதலீட்டைக் கொண்டுள்ளார்.
