ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 25 பேர் பலி
உக்ரைனின் டோனெட்ஸ்க், கார்கிவ் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 25 பேர் பலியானார்கள்.
உக்ரைனுக்கு எதிராக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா படையெடுத்தது.
இதனை ராணுவ நடவடிக்கை என கூறிய ரஷியா, உக்ரைனின் கீவ், டோனெட்ஸ்க், கார்கிவ், ஒடிசா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை தாக்கியது. இதில், வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.
அவை குண்டுகளின் தாக்குதலால் உருக்குலைந்தன. சில தீக்கிரையாகின. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்த போரானது 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இதில், இரு தரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனர். காயமடைந்தும் உள்ளனர்.