பிரிட்டன் எம்.பிக்கள் இந்த ஆண்டு வீணாக்கிய 250 டன் உணவு
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு மட்டும் மொத்தமாக 250 டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விலைவாசி உயர்வு, உணவு பற்றாக்குறை என சாதாரண மக்கள் தவித்துவரும் நிலையில், 2019க்கு பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் மிக அதிகமாக உணவு வீணாக்கப்பட்டுள்ளது 2022ல் தான் எனவும் கூறுகின்றனர்.
மட்டுமின்றி, உணவை வீணாக்காமல், அதை தேவையிருப்போருக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் ஒன்றும் லண்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் மட்டும் டிசம்பர் 7ம் திகதி வரையில் 268,740kg அளவுக்கு உணவு வீணடிக்கப்பட்டுள்ளது.
2021ல் 148,230kg உணவு வீணாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 250 டன் அளவுக்கு உணவு வீணாக்கப்பட்டுள்ள போதும், தேவையிருப்போர்களுக்கு வழங்கவோ நன்கொடையாக அளிக்கவோ இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் தேவைக்கு உணவு இல்லாமல் தவித்துவரும் நிலையில், இவ்வாறான தகவல்கள் மக்களில் ஏற்படுத்தும் தாக்கம் உண்மையில் பீதியை ஏற்படுத்துவதாக நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் உணவு வீணாக்குவதற்கு எதிராக உடனடியாக செயலில் இறங்க வேண்டும் எனவும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.