ஒரே வாரத்தில் கனடாவில் 28 வாகனங்கள் தீக்கிரை ; பொலிஸார் விசாரணை
ஒரு வார காலப் பகுதியில் கனடாவின் மொன்ட்றயலில் 28 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 12 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
மொன்ட்றயலின் பல பகுதிகளில் 48 மணித்தியால இடைவெளியில் 16 வாகன எரியூட்டல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வாகனங்களில் ஏற்பட்ட தீ விபத்து அயலில் காணப்படும் கட்டிடங்களும் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தினால் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த தீ விபத்துச் சம்பங்களினால் எவருக்கும் உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்துக்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதா அல்லது வெவ்வேறு சம்பவங்களா என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் பத்து கார்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.