கனடாவில் மருத்துவ காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் 29,468 பேர் உயிரிழப்பு

Canada
By Balamanuvelan Nov 26, 2026 08:59 AM GMT
Report

At least 29,000 Canadians died over last year while waiting for medical procedure: கனடாவில் மருத்துவ காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில், கடந்த ஆண்டில், குறைந்தபட்சம் 29,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில், மருத்துவரை சந்தித்துவிட்டு, பின்னர் அறுவை சிகிச்சை அல்லது ஸ்கேனுக்கான அப்பாயிண்ட்மென்டுக்காக காத்திருக்கும் காலகட்டத்தில், ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாக ஆய்வமைப்பு ஒன்று தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 

கனடாவில் மருத்துவ காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் 29,468 பேர் உயிரிழப்பு | 29468 Canadians Died Over Last Year In Wait List

2025க்கும் 2026க்கும் இடையிலான ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், அறுவை சிகிச்சை அல்லது ஸ்கேனுக்கான அப்பாயிண்ட்மென்டுக்காக காத்திருக்கும் காலகட்டத்தில், ஒரே ஆண்டில் 29,000 கனேடியர்கள் உயிரிழந்துள்ளதாக SecondStreet.org என்னும் ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் அந்த ஆய்வமைப்பு இத்தகைய தகவல்களை திரட்டிவரும் நிலையில், மருத்துவ காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களில் இதுவரை 129,892 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.

விடயம் என்னவென்றால், எல்லா மாகாணங்களும் இப்படி உயிரிழப்போர் எண்ணிக்கையை ஆவனப்படுத்துவதும் இல்லை, வெளிப்படையாக பகிர்வதும் இல்லை என்கிறார் SecondStreet.org அமைப்பின் தலைவரான கோலின் க்ரெய்க் என்பவர்.

அப்படி கனடாவில் எல்லா மாகாணங்களும் உயிரிழப்பு தொடர்பான தரவுகளை வெளியிட்டிருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகம் என்னும் விடயம் வெளியாகியிருக்கும் என்கிறார்.

அதே நேரத்தில், இப்படி உயிரிழப்போர் எண்ணிக்கையை வெளியிடுவது, மருத்துவ அமைப்பின் மீதே மக்கள் சந்தேகப்பட வழிவகை செய்யக்கூடும் என்கின்றன சில தொண்டு நிறுவனங்கள்.

ஏனென்றால், அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவர் சாலையைக் கடக்கும்போது விபத்தில் உயிரிழந்துவிட்டால், அதுவும் உயிரிழந்தோர் எண்ணிக்கையில்தான் வரும்.

ஆனால், அவர் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்ததால் உயிரிழக்கவில்லையே என்கின்றார் Ontario Health Coalition என்னும் அமைப்பைச் சேர்ந்த நட்டாலி மெஹ்ரா என்பவர்.

ஆனால், மருத்துவ காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மாகாண அரசுகள் வெளியிடவேண்டும், பிரச்சினை தெரிந்தால்தானே பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறையைக் கண்டறிய முடியும் என்கிறார் SecondStreet.org அமைப்பின் தலைவரான கோலின் க்ரெய்க்! 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US