நோவா ஸ்கோஷியாவில் போதைப்பொருள் கடத்தல்: ஆண் மற்றும் பெண் கைது
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திலுள்ள பிக்டோ கவுண்டியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நோவா ஸ்கோஷியா பொலிஸார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் 5 ஆம் திகதி, இப்பகுதியில் நபர் ஒருவர் மறுவிற்பனைக்காகக் கொக்கெய்ன் விநியோகிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து பிக்டோ கவுண்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 24 ஆம் திகதி வோட்டர் வீதியில் சந்தேகநபரான ட்ரென்டன் பகுதியைச் சேர்ந்த நபர் பயணித்த வாகனத்தை பொலிஸார் வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது வாகனத்தின் சாரதியும் பயணி ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொக்கெய்ன், சானக்ஸ் மாத்திரைகள், எடைபோடும் தராசுகள், சிறிய பைகள் , வெற்றிடமாக்கும் இயந்திரம் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானி மேத்யூ மெக்கால்டஃப், போதைப்பொருள் கடத்தும் நோக்கில் வைத்திருந்தமை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பிணை நிபந்தனைகளை மீறியமை தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
நவம்பர் 25 ஆம் திகதி பிக்டோ மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆஷ்லி கிறிஸ்டின் ஜெரியர், போதைப்பொருள் கடத்தும் நோக்கில் வைத்திருந்தமை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர், எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.