ரொறன்ரோவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
ரொறன்ரோ அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தீ விபத்துச் சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டுன்டாஸ் மற்றும் ஸேர்போர்ன் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள தேவாலயமொன்றை ஒட்டி இந்த அடுக்குமாடி கட்டடம் அமைந்துள்ளது.
ஏழு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது சில மாடிகளில் கடுமையான புகை மூட்டம் காணப்பட்டதாகவும், சுமார் 80 தீயணைப்பு படையினர் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீவிபத்தில் சிக்கியவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு படைவீரர்களும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கட்டடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகளில் கடுயைமான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
என்ன காரணத்தினால் விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுமார் ஒன்றரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.