வெனிசுலா நிலநடுக்கம் ; 6 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 3 வயது குழந்தை
கடந்த வாரம் பேரழிவை ஏற்படுத்திய இரட்டை நிலநடுக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட வெனிசுலாவில், மீட்புப் பணிகள் தொடரந்து நடந்து வருகிறது.
இந்த பணிகளின் போது ஜோர்டானிய மீட்பு பணியாளர்கள் ஒரு குழந்தையை மீட்டனர்

லா குவைரா மாநிலத்தில் உள்ள லாஸ் கோரல்ஸ் கார்டன் 1 கட்டிடத்தில் ஆறு நாட்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த கிளிபர் மோரன், ஜோர்டானை சேர்ந்த மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டதாக வெனிசுலாவின் தற்காலிக அதிபர் தெரிவித்தார்.
ரோட்ரிக்ஸால் 3 வயது குழந்தை என்றும், ஆனால் தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸால் 2 வயது குழந்தை என்றும் விவரிக்கப்பட்ட மோரன், பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை, ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் வெனிசுலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.