அமெரிக்காவில் கப்பல்கள் மோதி விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் அருகே மிசிசிபி ஆற்றில் சரக்கு கப்பல் மோதியதில் சுற்றுலா பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக
படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் காயமடைந்த 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிசிசிப்பியில் நிகழ்ந்த அதிசயம்
நியூ ஆர்லியன்ஸ் துறைமுகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'தி அமெரிக்கன் ஹெரிடேஜ்' என்ற சுற்றுலா கப்பல் மீது 'அட்லாண்டிக் அஸ்பால்ட்' என்ற சரக்கு கப்பல் மோதியது. இதில் அந்த சுற்றுலா கப்பல் அப்படியே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 180 பயணிகள் மற்றும் பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.
"இது மிசிசிப்பியில் நிகழ்ந்த அதிசயம்" என்று நியூ ஆர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரேனோ தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் யாருக்கும் ஆபத்தான காயம் இல்லை என்றும் அவர் கூறினார்.
8 நாள் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.