2 ஈரானிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா அறிவிப்பு
பஹ்ரைனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஈரானின் இரண்டு தாக்குதல் டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.
அதேவேளை, பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்காவின் முன்கூட்டிய எச்சரிக்கை ரேடார் அமைப்பைத் தாக்கியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

எனினும், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவான CENTCOM, ரேடார் அமைப்பு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலை மறுத்துள்ளதுடன், இச்சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற எண்ணெய்க் கப்பல் ஒன்று கடற்படை கண்ணிவெடியில் சிக்கி வெடிப்புக்குள்ளானதாகவும் ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இந்தப் பரஸ்பர தாக்குதல் குற்றச்சாட்டுகள் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.