காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலி
இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையே கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிற நிலையில் இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் இதுவரை 38,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பாலா பகுதியில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி இஸ்ரேலியப் படைகள் முன்னேறியபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவுடன் கத்தார். எகிப்து உள்ளிட்ட நாடுகளால் தொடங்கப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்து வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.