கனடாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு
கனடாவின் கனனாஸ்கிஸ் பிராந்தியத்தின் உள்ள பேரியர் ஏரியில் நீரில் மூழ்கிய ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
படகு கவிழ்ந்ததில் குறித்த நபர் நீரில் மூழ்கியதில் இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
கல்கரியைச் சேர்ந்த 30 வயது ஆண் மற்றும் சீனாவிலிருந்து வந்திருந்த அவரது பெற்றோர் இந்தப் படகில் பயணம் செய்துள்ளனர்.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 60 வயது ஆண் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த படகு கவிழ்ந்த விவகாரத்தில் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலையினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காற்று மற்றும் அலையினால் படகு கவிழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
சில இடங்களில வானிலையில் திடீரென மாற்றங்கள் ஏற்படும் எனவும் இது குறித்து மக்கள் போதியளவு விளக்கத்துடன் இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        