கனேடிய மாகாணமொன்றில் கல்லறை நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்குமிடையிலான பிரச்சினையால் பாதிக்கப்படும் மக்கள்
கனேடிய மாகாணமொன்றில், கல்லறை நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்குமிடையிலான பிரச்சினையால், கனடாவின் மிகப்பெரிய கல்லறை என அழைக்கப்படும் கல்லறையில் 300 உடல்கள் புதைக்கப்படாமல் இறுதிச்சடங்கு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியலில் அமைந்துள்ளது Notre-Dame-des-Neiges Cemetery என்னும் கல்லறை. 169 ஆண்டு கால பழமை மிக்க அந்த கல்லறையின் வேலியிலுள்ள இடைவெளி வழியாக உள்ளே நுழைந்து தனது 13 வயது மகனின் கல்லறையைச் சென்று பார்த்து, அதனருகே எக்கச்சக்கமாக வளர்ந்துள்ள புல்லை வெட்டி சரி செய்துவிட்டு, குப்பைகளையும் சுத்தம் செய்துவிட்டு வருகிறார் Nancy Babalis.
அவரைப் போலவே பலர் ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லறையின் வேலி வழியாக உள்ளே நுழைந்து தங்கள் அன்பிற்குரியவர்களின் கல்லறைகளைக் கண்டு வருகிறார்கள்.
இன்னொரு பக்கம், கல்லறையின் மறு பகுதியில் அமைந்துள்ள இறுதிச்சடங்கு மையத்தில், சுமார் 300 உடல்கள் குளிர்பதனப் பெட்டிகளில் புதைக்கப்படுவதற்காக காத்திருக்கின்றன.
மரணமடைந்த அந்த நபர்களின் உறவினர்கள், தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு எப்போது இறுதிச்சடங்கு செய்வதென தெரியாமல் காத்திருக்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், கல்லறை ஊழியர்கள் சுமார் 100 பேர், ஜனவரி மாதத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கல்லறையின் கதவுகள் அப்போதிருந்தே பூட்டப்பட்டுள்ளது.
ஆகவேதான், மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களின் கல்லறைகளை வேலிக்குள் நுழைந்து சென்று பார்த்துவருகிறார்கள்.
அன்பிற்குரியவர்களை அடக்கம் செய்யக் காத்திருப்பவர்களுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை.
ஆக, கியூபெக் மாகாண அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு, வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தால்தான் இத்தனை பேருடைய கவலைகளும் தீரும்.
இதற்கிடையில், தொழிலாளர் துறை அமைச்சரான Jean Boulet வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில், இன்று, திங்கட்கிழமை, இந்த கல்லறை பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், அதாவது, தொழிலாளர்களும், நிர்வாக ஊழியர்களும் தன்னை சந்தித்துப் பேச இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |