பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க நியூசிலாந்து பரிசீலனை
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க நியூசிலாந்து பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அமைச்சரவை செப்டம்பரில் ஒரு முறையான முடிவை எடுத்து ஐ.நா. தலைவர்கள் வாரத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறையை முன்வைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் சமீபத்திய வாரங்களில் செப்டம்பர் ஐ.நா. பொதுச் சபையில் பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பீட்டர்ஸ் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் இந்தப் பிரச்சினையை கவனமாக ஆராய்ந்து பின்னர் நியூசிலாந்தின் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் தேசிய நலனுக்கு ஏற்ப செயற்பட விரும்புகிறோம்.
பலஸ்தீன அரசை நாங்கள் அங்கீகரிப்பது எப்போது என்பதுதான் முக்கியம் என்பதில் நியூசிலாந்து சிறிது காலமாக தெளிவாக உள்ளது, என்று பீட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.