கனடியர்களின் அமெரிக்க பயணத்தில் தொடர் வீழ்ச்சி
கனடியர்களின் அமெரிக்க பயணங்களில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதத்தில் தொடர்ந்து ஏழாவது மாதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2024 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவிலிருந்து தரை வழியாக திரும்பிய கனடியர்களின் எண்ணிக்கை 36.9 சதவீதம் குறைந்துள்ளது.
தரை வழி பயணம் மட்டுமல்ல, விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து திரும்பிய கனடியர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 25.8 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொத்தமாக, கடந்த ஆண்டு 2.6 மில்லியன் கனடியர்கள் காரில் திரும்பிய நிலையில், இந்த ஆண்டு 1.7 மில்லியன் பேர் மட்டுமே காரில் திரும்பியுள்ளனர்.
2025 ஆரம்பத்திலிருந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு மற்றும் கனடாவுக்கு எதிரான கட்டண அச்சுறுத்தல்கள் மற்றும் கனடாவை அமெரிக்க மாநிலமாக இணைப்பது பற்றிய அவரது தொடர்ச்சியான அறிவிப்புகளுடன் இந்த பயண வீழ்ச்சி தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டிரம்பின் வரி விதிப்பு காரணமாக அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் அமெரிக்க பயணங்களை தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.