குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்து 44 பேர் உயிரிழப்பு; மூன்றுநாள் கடலில் தவித்த சிறுமி
இத்தாலியின் கடற்பரப்பிற்கு அருகில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள மீட்பு பணியினர் 11 சிறுமி உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
படகு கவிழ்ந்ததில் அவர் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என்றும், 44 உயிரிழந்திருக்கவேண்டும் என கருதுகின்றோம் என கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
மூன்றுநாள் கடலில் தவித்த சிறுமி
கொம்பாஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு , மத்தியதரை கடலில் புலம்பெயர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு உதவி வருகின்றது.
இந்த குழுவின் டிரெட்டமார் 3 என்ற கப்பல் புதன்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் சிறுமியின் அபயக்குரலை செவிமடுத்தது என தெரிவித்துள்ள மீட்பு பணியாளர்கள், இன்னொரு மீட்பு முயற்சிக்கு செல்லும்போதே சிறுமியின் அலறல் கேட்டதாகதெரிவித்துள்ளனர்.
சியாரோ லியோனை சேர்ந்த 11 வயது சிறுமி உயிர்காப்பு அங்கிகளுடன் மூன்றுநாள் கடலில் மிதந்திருக்கின்றாள் என கொம்பஸ் கலெக்டிவ் தெரிவித்துள்ளது.
அந்த சிறுமி காப்பாற்றப்படுவதை காண்பிக்கும் படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த சிறுமி 12 மணித்தியாலங்கள் கடலில் தத்தளித்துள்ளார் என அவரை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர் தெரிவித்துள்ளார்.
உலோக படகு துனிசியாவிலிருந்து புறப்பட்டது என தெரிவித்துள்ள சிறுமி கடும் புயல் 11 அடிஅலைகள் காரணமாக படகு புறப்பட்ட சில நிமிடத்திலேயே கவிழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
படகு கவிழ்ந்ததில் தன்னுடன்வேறு இருவரும் கடலில் தத்தளித்ததாகவு எனினும் அவர்களை பின்னர் காணவில்லை எனவும் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.