ட்ரம்ப் நிராகரித்த அமைதித் திட்டம் ; சர்வதேச எண்ணெய் சந்தையில் தாக்கம்
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் நோக்கில் ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சர்வதேச சந்தையில் பிரென்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 4 சதவீதம் வரை அதிகரித்து, 108.50 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கிய பாதையாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற நிலையே, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.