ஊழியர்களுக்கு 45000 பவுண்ட்; இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரித்தானிய நிறுவனம்!
பிரித்தானியாவில் நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதன் உரிமையாளர் ஒருவர் 45000 பவுண்ட் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, விநியோகத்தில் தடை எனப் பல பிரச்சனைகள் காரணமாக விலைவாசி அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை அதிகளவில் நம்பியிருக்கும் ஐரோப்பிய, பிரித்தானிய நாடுகள் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பிரித்தானியாவின் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் பிரித்தானியாவின் மத்திய வங்கியான பாங்க் ஆப் இங்கிலாந்தில் பணவீக்கம் இலக்கை 2 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் பிரித்தானியாவில் இயங்கி வரும் எம்ரீஸ் டிம்பர் அண்ட் பில்டர்ஸ் மெர்ச்சன்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் ஹிப்கின்ஸ் (James Hipkins), தனது நிறுவனத்தில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்குச் சுமார் 45000 பவுண்ட் அளவிலான பணத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளார்.
தனது நிறுவன ஊழியர்கள் விலைவாசியைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தலா 750 பவுண்ட் கொடுத்துள்ளார். ஊழியர்கள் கஷ்டப்படுவது எனக்குத் தெரியும், அவர்களின் சுமையை நிறுவனத்தின் வெற்றி மூலம் ஈடு செய்யும் சிறு முயற்சியை எடுத்துள்ளதாக நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் ஹிப்கின்ஸ் அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கடந்த சில வாரத்தில் அரசாங்கம் தனது வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதைத் தாண்டி விலை உயர்வை சமாளிக்க வேண்டும் என்பதற்காக மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், இணைய கட்டணம், தொலைபேசி சேவை கட்டணம், வீட்டு வாடகை என்பவை உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் பிரித்தானியாவில் இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜேம்ஸ் ஹிப்கின்ஸ், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் 60 ஊழியர்களுக்கு 750 பவுண்ட் கொடுத்து உதவியுள்ளார்.