கனடாவில் பாரிய தீ விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
கனடாவின் பிராம்டனில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஐந்தாக உயர்வடைந்துள்ளது.
துயரகரமான வீட்டு தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும், கருவில் இருந்த ஒரு சிசுவும் உயிரிழந்துள்ளதாக உறவினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்லஃப்ளின் மற்றும் ரிமெம்ப்ரன்ஸ் சாலைகளுக்கு அருகிலுள்ள இந்த வீட்டில் மொத்தமாக 12 பேர் வசித்ததாக பீல் பிராந்தியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதில் 10 பேர் பல தலைமுறை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; கீழ்தளத்தில் வசித்த இரண்டு வாடகையாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர், நான்கு பேர் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தப்பினர்; இவர்கள் அனைவரும் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
5 வயது சிறுவன் மற்றும் மேலும் இருவர் தற்போது குணமடைந்துளள்னர் எனவும் இன்னொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை இடிபாடுகளில் மூன்றாவது உடல் கண்டெடுக்கப்பட்டது, காணாமல் போனோரில் ஒருவர் குழந்தை என நம்பப்படுகிறது.
தீயில் வீட்டு பொருட்கள் முழுவதும் அழிந்துவிட்டன — ஆடைகள், பாஸ்போர்டுகள், ஆவணங்கள் மற்றும் அனைத்தும் கருகி நாசமாகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.