துருக்கி நிலநடுக்கத்திலிருந்து 204 மணி நேரத்திற்கு பிறகு 5 பேர் உயிருடன் மீட்பு!
துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகை உலுக்கிய துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்க பேரழிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,000ஐ தாண்டியுள்ளது.
இந்தநிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமேற்கு சிரியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு 204 மணித்தியாலத்திற்குப் பிறகு தெற்கு நகரமான ஹடேயில் இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணும் ஆணும் மீட்கப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் கடந்த திங்கட்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டு 198 மணி நேரத்திற்குப் பிறகு தெற்கு துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து 18 வயது முஹம்மது கபர் மீட்கப்பட்டார்.
சிறிது நேரத்திற்கு முன்பு, அண்டை மாநிலமான கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து 2 சகோதரர்களை மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டனர்.