கொங்கோ கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 52 பேர் பலி
கொங்கோவின் கிராமம் ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 52 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க நாடான கொங்கோவில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.
பல்வேறு கிளர்ச்சி குழுக்கள்
உகாண்டாவை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த குழுவினர், எல்லையோர கிராமங்களில் நுழைந்து பொதுமக்கள் மீது திடீரென நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த நிலையில், எம்-23 கிளர்ச்சி குழுவினர் கோமா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
கிவு மாகாணம், பாப்பரே கிராமத்துக்குள் கிளர்ச்சி குழுவினர் நுழைந்து, பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோது சுமார் 52 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது , கிளர்ச்சியாளர்கள் 100 பேரைப் பணய கைதிகளாகக் கடத்திச் சென்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.