கனடாவில் பணவீக்க வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவில் பணவீக்க வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கடந்த ஜூலை பணவீக்கம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது.
எனினும், மளிகை மற்றும் தங்குமிட செலவுகள் கடந்த மாதம் அதிகரித்ததாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் பணவீக்கம் 1.7 சதவீதமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது ஜூன் மாதத்தில் 1.9 சதவீதத்தில் இருந்து குறைவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வாசிப்பு பெரும்பாலான பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை விட பத்து அடிப்படை புள்ளிகள் குறைவாக காணப்படுகின்றது.
மளிகை கடைகளில் உள்ள உணவு பணவீக்கம் ஜூலை மாதத்தில் ஆண்டு வாரியாக 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.