கனடாவில் இலவசமாக ஒரு மில்லியன் டொலர் வெல்ல வாய்ப்பு
கனடாவில் இலவசமாக ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றெடுக்கக் கூடிய சந்தர்ப்பம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் நிறுவனம் (OLG) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஒன்டாரியோவில் வாழ்ந்து வரும் அனைத்து வயது வந்தவர்களும் இந்த ஒரு மில்லியன் டாலர் வெல்லும் வாய்ப்பை பெறுகின்றனர்.
லொத்தர் சீட்டிலுப்பில் இலவசமாக பங்கேற்று பரிசு வென்றெடுக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் தனது 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக "வெல்கம் டு வின்டாரியோ" போட்டி தொடங்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
“கடந்த 50 ஆண்டுகளாக எங்களுடன் விளையாடியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நாங்கள் ஒன்டாரியோவை வின்டாரியோவாக மாற்றுகிறோம்,” என்று போட்டி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் ஒரு முதல் பரிசு 1 மில்லியன் டொலரும், இரண்டாம் பரிசுகளாக 1,000 டொலர்கள் 50 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.