உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 6 பேர் பலி
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிற நிலையில் உக்ரேனிய ட்ரோன்களால் தாக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை, ரஷ்யாவுடனான உக்ரைனின் எல்லையானது பெல்கோரோட் மாகாணத்தில் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் கிளட்கோவ் தெரிவித்தார்.
தற்போது இரு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் குடியிருப்புகள், வாகனங்கள் தாக்கப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர்.
இந்த தாக்குலின் போது இரண்டு குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பி நிலையில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கிளாட்கோவ் கூறினார்.
பெல்கோரோட் மாகாணத்தின் போரிசோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள பெரெசோவ்கா கிராமத்திற்கு அருகே ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் இரண்டு வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.