கனடாவில் 6 வயது சிறுமி மாயம்: தீவிர தேடுதல் வேட்டையில் பொலிஸார்!
கனடாவின் மிசிசாகா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணாமல் போன 6 வயது சிறுமியான கெய்லி வில்லியம்ஸ் தாம்சனைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
4 அடி உயரமும், மெலிந்த தோற்றத்தையும் கொண்ட இவருக்கு நீண்ட பொன்னிற முடி உள்ளதாகவும், நீல நிறக் கண்களைக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் லேக்ஷோர் வீதி கிழக்கு மற்றும் எலிசபெத் வீதி தெற்கு சந்திப்புக்கு அருகில் சிறுமி கெய்லி கடைசியாகக் காணப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தையின் நண்பரான பிளேர் ஹேமில்டன் என்பவருடன் சிறுமி இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
சிறுமியின் மறைவு தொடர்பான சூழ்நிலைகளை தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, கெய்லியின் தாயாரான நிக்கோல் தாம்சனை தொடர்புகொண்டு பேச தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியைக் கண்டுபிடித்து அவரைப் பாதுகாப்பாக மீட்பதே எங்கள் முதன்மை நோக்கமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் வயது மற்றும் அவர் காணாமல் போன சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவரது பாதுகாப்பு குறித்து நாங்கள் பெரும் கவலையடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை விட்பி பகுதியில் உள்ள மெக்டானால்ட்ஸ் பிளாஸா பகுதிக்குச் சென்றவர்கள், அல்லது அப்பகுதியின் டேஷ்கேம் பதிவு/கைபேசி வீடியோ வைத்திருப்பவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் யாரேனும் கெய்லி வில்லியம்ஸ் அல்லது பிளேர் ஹேமில்டன் ஆகியோரைக் கண்டால், உடனடியாக 905-579-1520 (ext. 1800) என்ற எண்ணிலோ அல்லது கிரைம் ஸ்டொபப்ர்ஸ் அமைப்பிலோ ரகசியமாகத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.