60 மீற்றர் நீளமான கடிதம் ஊடாக கனேடிய பிரதமரிடம் விடுக்கப்படும் கோரிக்கை என்ன?
சுமார் 60 மீற்றர் நீளமான கடிதமொன்றை கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிடம் அந்நாட்டு விஞ்ஞானிகள் ஒப்படைக்க உள்ளனர்.
நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூட உள்ளனர்.
‘எங்கள் விஞ்ஞானத்திற்கு ஆதரவளிக்கவும்’ என்ற தொனிப்பொருளில் பேரணியொன்று நடைபெறவுள்ளது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ (Justin Trudeau) மற்றும் விஞ்ஞான,புத்தாக்க அமைச்சர் பிரான்கோயிஸ் பிலிப்பி சம்பான்ங் (François-Philippe Champagne) ஆகியோரிடம் இந்த கடிதம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இந்த கடித்த்தின் நீளம் சுமார் அறுபது மீற்றர் என தெரிவிக்கப்படுகின்றது.
விஞ்ஞான ஆய்வுகளுக்காகவும் ஆய்வாளர்களுக்காகவும் ஒதுக்கப்படும் தொகை போதுமானதல்ல என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
போதியளவு நிதி ஒதுக்கீடு கிடைக்காத காரணத்தினால் ஆய்வாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும், சிலர் தங்களது ஆய்வுகளை கைவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2003ம் ஆண்டின் பின்னர் ஆய்வுகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் வழங்கப்படும் நிதி அதிகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வுண்டுமென கோரப்பட்டுள்ளது.