ஒரு மணித்தியாலத்தில் 600 பேர் கொலை... வெளிநாடொன்றில் அவல நிலை!
புர்கினா பாசோவில் உள்ள பர்சலோகோ நகரில் அல்-கொய்தாவுடன் தொடர்புடையவர்களால் கடந்த ஒகஸ்ட் மாதம் 24-ம் திகதி சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் (04-10-2024) வெளியிடப்பட்ட பிரான்ஸ் அரசாங்கத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் குறித்த தாக்குதல் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்.
இந்த தாக்குதலில் குடும்பத்தை இழந்த ஒருவர் கூறுகையில்,
3 நாட்களாக நாங்கள் உடல்களை சேகரித்துக் கொண்டிருந்ததாக கூறினார். போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்க நகரத்தைச் சுற்றி பரந்த அகழி வலையமைப்பைத் தோண்டுமாறு உள்ளூர்வாசிகளுக்கு ராணுவத்தால் கட்டளையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் அகழி தோண்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்ட போது நடைபெற்றுள்ளது.