வாகனில் இடம்பெற்ற விபத்தில் 69 வயது பெண் பலி
வாகன் நகரில் இடம்பெற்ற இரு வாகன விபத்தில் 69 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இரவு 11 மணியளவில் ஹைவே 27 மற்றும் ரூதர்ஃபோர்டு சாலை சந்திப்பில் விபத்தில் சிக்கிய வாகனங்களில் ஒன்று தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டது.
யார்க் பிராந்திய காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு முன்பாகவே எரிந்து கொண்டிருந்த வாகனத்தில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற முடிந்ததாக கூறினர்.
பின்னர், பயணியாக இருந்த பெண் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
ஏனைய ஆறு பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அவர்களின் காயங்களின் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.