கனடாவில் 7 பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல்
கனடாவின் மிசிசாகாவில் அமைந்துள்ள ஏழு பள்ளிக்கூடங்கள் மீது இனவெறி மற்றும் பால்நிலை வெறுப்பு அடிப்படையிலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மிசிசாகாவில் உள்ள ஏழு உயர்நிலை பள்ளிக்கூடங்களில் வெறுப்புணர்வு அடிப்படையிலான கிராஃபிட்டிகள் வரையப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து நான்கு ஆண் சந்தேகத்துக்குரியவர்களை பீல் பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஏப்ரல் 10 முதல் 18 ஆம் திகதிதி வரை இந்த சம்பவங்கள் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கிராஃபிட்டி இனவெறி மற்றும் 2SLGBTQI+ சமூகங்களை குறிவைக்கும் வகையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏழு பள்ளிக்கூடங்களிலும் இந்த சம்பவங்கள் இரவு நேரத்தில் நடந்துள்ளன என்றும், நான்கு ஆண்கள் இதில் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.