மெக்சிகோ சிறை கலவரத்தில் 7 கைதிகள் உயிரிழப்பு
மெக்சிகோவில் உள்ள சிறையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில், 7 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் வெராக்ரூஸ் மாகாணத்தில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ள டக்ஸ்பன் சிறைச்சாலையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த குற்றக் கும்பலானது மற்றைய கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிந்து வந்ததாகக் கூறப்படும் கைதிகளுக்கிடையிலேயே குறித்த கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலவரத்தின் போது, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டதுடன் மேலும் சில கைதிகள் சிறைச்சாலையின் உள்ளே தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கலவரத்தில் 7 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் , 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.