டிரம்பின் இரக்கமற்ற செயல் ; நாடுகடத்தப்பட்ட 73 வயது இந்திய மூதாட்டி!
73 வயது இந்திய மூதாட்டி ஒருவர் அமெரிக்காவில் புகலிடம் கோரி அந்த கோரிக்கை தோல்வியடைந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி அவர் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வசித்து வந்த 73 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்ட பெண் சீக்கிய சமூகத்தைச் சார்ந்தவர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த 1991 ஆம் ஆண்டில் அவருடைய இரு மகன்களுடன் அவர் கலிபோர்னியாவில் குடியேறினார். எனினும் தற்போது அவரது புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு இந்த வார ஆரம்பத்தில் மூதாட்டி நாடு கடத்தப்பட்டார்.
அமெரிக்க அதிபராக டிரம் பதவியேற்ற பின்னர் குடியேறிகள் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.