பிரித்தானியாவில் தாக்குதலுக்கு சதிதிட்டம் தீட்டிய 8 பேர் கைது
பிரித்தானியாவில் குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய இருவேறு தேடுதலில் நடவடிக்கையில் எட்டு பேர் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 7 பேர் ஈரானியர்கள் என கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட 4 ஈரானிய நாட்டவர்களில் 29 வயதுடைய இருவர், 40 வயதுடைய ஒருவர் மற்றும் 46 வயதுடைய ஒருவர் அடங்குவர். ஐந்தாவது நபரின் நாடு மற்றும் வயது இன்னும் வெளியாகவில்லை.
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குத் தயாரானதாக சந்தேகம்
அதேவேளை, லண்டனில் மேலும் மூன்று ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் இரண்டு நடவடிக்கைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை அல்ல என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட முதல் ஐந்து பேரில், நான்கு பேர் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐந்தாவது நபர் பொலிஸ் மற்றும் குற்றவியல் சான்றுகள் சட்டத்தின் (பேஸ்) கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குத் தயாரானதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு லண்டன், ஸ்டாக்போர்ட், ரோச்டேல் மற்றும் மான்செஸ்டரில் உள்ள ஸ்விண்டன் ஆகிய இடங்களில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸ் மற்றும் வில்ட்ஷயர் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரித்தானியா முழுவதும் உள்ள பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மெட் பயங்கரவாத தடுப்பு கட்டளை பிரிவு இந்த விசாரணையை வழிநடத்துகிறதாகவும் கூறப்படுகின்றது.